Friday 3rd of May 2024 10:14:30 AM GMT

LANGUAGE - TAMIL
-
மட்டு.வீதி புனரமைப்பு என்ற பெயரில் இடம்பெற்றுவரும் மண் கொள்ளையினை தடுத்து நிறுத்துமாறு முறைப்பாடு!

மட்டு.வீதி புனரமைப்பு என்ற பெயரில் இடம்பெற்றுவரும் மண் கொள்ளையினை தடுத்து நிறுத்துமாறு முறைப்பாடு!


மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி-சந்தனமடு ஆறு வீதி புனரமைப்பு என்ற பெயரில் இடம்பெற்றுவரும் மண் கொள்ளையினை தடுத்து நிறுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மு.முரளிதரன் மற்றும் பிரதேச மக்களினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதேசசபை உறுப்பினர்,

சித்தாண்டி சந்தமணடு பகுதியில் பகுதியில் இரவு வேளையில் வீதி ஒப்பந்தகாரர் ஒருவரினால் பாரிளயவில் மண் கொள்ளையிடப்படுகின்றது. சந்தனமடு ஆறு வெள்ளகாலத்தில் பெருக்கெடுப்பதன் காரணமாக சித்தாண்டி முற்றாக வெள்ளத்தில் மூழ்கின்றது.இதற்கு காரணம் குறித்த பகுதியில் முன்னெடுக்கப்படும் மண் அகழ்வாகும்.

சந்தனமடு ஆற்று பகுதியில் முன்னெடுக்கப்படும் சட்ட விரோத மண் அகழ்வினை நிறுத்துமாறு 2015ஆம் ஆண்டு பிரதேச மக்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் நடந்த மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் குறித்த பகுதியில் மண் அகழ்வினை முற்றாக நிறுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து குறித்த பகுதியில் மண் அரிப்பனை தடுக்கும் வகையில் பிரதேச மக்களினால் பனங்கன்றுகள் நடப்பட்டு குறித்த பகுதியை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த சந்தனமடு ஆற்றுப்பகுதியில் முன்னெடுக்கப்படும் மண் அகழ்வுகள் காரணமாக மழை காலங்களில் சித்தாண்டி பகுதி முழுமையாக வெள்ளத்தில் மூழ்குவதன் காரணமாக பொதுமக்கள் அப்பகுதியில் மண் அகழ்வினை தடுக்கும் வகையிலான தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துவந்தனர்.

இந்த நிலையில் அண்மையில் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவர் சந்திரகாந்தனால் குறித்த சந்தனமடு ஆற்றுப்பகுதி வரையான வீதியை புனரமைப்பதற்கான அடிக்கல் நடப்பட்டது.இந்த நிலையில் குறித்த வீதியை புனரமைப்பு செய்வதற்காக ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தகாரர் தொடர்ச்சியாக அப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் மண் அகழும் செயற்பாட்டினை முன்னெடுத்துவருவதாகவும் இரவு வேளைகளிலும் அதிகளவான மண் அள்ளப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் மண் அரிப்பனை தடுப்பதற்காக நடப்பட்ட பனங்கன்றுகளும் இதன்போது அழிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் மண் அகழ்வானது எதிர்காலத்தில் சித்தாண்டி கிராமத்தினை முற்றாக அழிக்கும் நிலையினை ஏற்படும் எனவும் பிரதேசசபை உறுப்பினர் தெரிவித்தார்.

இதேநேரம் இது தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE